தஞ்சாவூரில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்றது. அகில இந்திய, மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் முடிவின்படி, ஒன்றிய, மாநில அரசுகள், ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடக் கோரி, அகில இந்திய அளவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்தது. அதன்படி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இர.கலியமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் துவக்கவுரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் மணி துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.செந்தில்குமார், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் என்.குருசாமி ஆகியோர் கோரிக்கைகளை ஆதரித்து பேசினர். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜூ நன்றி கூறினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.கோவிந்தராசு நன்றி கூறினார்.