உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-07-15 16:05 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் இன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆமணக்குநத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்; குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களைத் தேடி அரசு அதிகாரிகள் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களுக்கு உரிய தீர்வை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், இன்று தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, இம்முகாமினை அனைத்து பொதுமக்களும் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பின்னர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமானது இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மகத்தான திட்டத்தின் முன்னாடியாக மக்களுடன் முதல்வர் முகாம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்யும் அளவிற்கான சிறப்பான திட்டமாக உள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம்கள் ஜீலை 15 ஆம் தேதி முதல் துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை 349 முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வரும் விண்ணப்பங்களை சரியான முறையில் விசாரணை செய்து தீர்வுகாண உள்ளனர். இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் தன்னார்வலர்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் பற்றிய கருத்துக்களையும், முகாமில் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை முகாம் நடைபெறுவருதற்கு முன்பாகவே வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து விண்ணப்பங்களை கொடுத்துள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டும் எனவும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்தார். முன்னதாக, இம்முகாமில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவருக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நத்தம் பட்டா மாறுதல் உத்தரவினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரங்களையும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

Similar News