உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்த எம் எல் ஏ

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்த எம் எல் ஏ;

Update: 2025-07-15 16:16 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், பொது மக்களுக்கு அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.இந்த முகாமில் சார் ஆட்சியர் மாலதிஹெலன், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம் ,துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் ரமேஷ்,வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் அரசு துறை அதிகாரிகள் மறைமலைநகர் தெற்கு நகர கழக செயலாளர் த.வினோத்குமார், மற்றும் வார்டு கவுன்சிலர்கள், உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News