வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கான்சாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் .

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கான்சாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் .;

Update: 2025-07-15 16:17 GMT
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கான்சாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் . விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கான்சாபுரம் ஊராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்க அப்பகுதியில் உள்ள பழைய சாலையினை அகற்றி உள்ளனர்.இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சாலை அமைக்கப்படவில்லை என பகுதி மக்கள் கூறுகின்றனர்.இதனால் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்லும் பொழுது மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் அவ்வப்போது சிறு சிறு வாகன விபத்துகளும் ஏற்படுவதாகவும் கூறி இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கான்சாபுரம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள், போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்திற்குள் கான்சாபுரம் ஊராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.மீண்டும் ஒரு வார காலத்திற்குள் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை எனில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News