மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக பலி!

ஸ்ரீவைகுண்டம் அருகே மின்சாரம் தாக்கியதில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2025-07-16 01:22 GMT
ஸ்ரீவைகுண்டம் அருகே மின்சாரம் தாக்கியதில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீபராங்குசநல்லூரை சேர்ந்தவர் காளிதுரை மகன் கேசவகார்த்தீசன் (19). இவர் நெல்லை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். காளிதுரை ஸ்ரீபராங்குசநல்லூர் வாய்க்கால்கரை பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கேசவகார்த்தீசன் புதிய வீட்டு சுவருக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இருந்தபோதும் அவர் பரிதாபமாக பலியானார். அதனைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News