சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் மணிமுத்தாற்றில் மணல் திருட்டு ஜோராக நடந்து வந்தது. இது குறித்த தகவல் அறிந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மணிமுத்தாறு கரையோர பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மணிமுத்தாற்றில் மணல் திருடி மூட்டை கட்டி, டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கப்பன் மகன் ஏழுமலை, 42; என்பவரை கைது செய்து, 1.5 யூனிட் மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.