கோவை விமான நிலையத்தில் ரெட் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் பயணிக்கிடையே வாக்குவாதம்: வீடியோ வைரல்

கோவை சர்வதேச விமான நிலையத்தில், ரெட் கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் விமானப் பயணிக்கிடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-07-16 08:09 GMT
கோவை சர்வதேச விமான நிலையத்தில், ரெட் கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் விமானப் பயணிக்கிடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.ஜி. (கேஸ்) பொருத்தப்பட்ட கார் வந்ததால், பயனாளர் அதை கேன்சல் செய்துள்ளார். அதனால் ஆத்திரத்தில் ஓட்டுநர் ஆபாச வார்த்தைகளால் பேசினார் என்றும், இருவரும் மாறி மாறி கெட்ட வார்த்தைகளால் பேசிக் கொண்டதாக தெரிகிறது. இதை அருகில் இருந்தவர்கள் புகைப்படமாக பதிவு செய்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பதவி வருகிறது.

Similar News