கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி;
செங்கல்பட்டு மாவட்டம், ஒரத்தி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.பின், குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு, கல்வியின் அவசியம் குறித்து, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், ஒரத்தி பஜார் வீதி, பள்ளிக்கூட வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி சென்றனர் இதில், ஒரத்தி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பூபாலன் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.