ரயில்வே கேட் கீப்பரை மதுபோதையில் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர்*

ரயில்வே கேட் கீப்பரை மதுபோதையில் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர்*;

Update: 2025-07-16 14:37 GMT
சாத்தூர் அருகே ரயில்வே கேட் கீப்பரை மதுபோதையில் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆர் ஆர் நகர் ரயில்வே கேட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பர்வேஸ் குமார் (வயது 25) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக கேட் கீப்பராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 13 ம் தேதி இரவு 10.30 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில் சண்முகசுந்தராபுரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (67) என்பவர் ரயில்வே கேட்ட கடப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்து உள்ளார் . அப்போது மூடி இருந்த ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி பர்வேஷ் குமாருடன் மதுபோதையில் இருந்த காளிமுத்து சண்டையிட்டு ரயில்வே கேட் ஊழியர் பர்வேஷ் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது மேலும் இந்த சம்பவம் குறிப்பு பர்வேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பர்வேஷ்குமார் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News