உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.;

Update: 2025-07-16 14:41 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நடையனேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 நேற்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. அதன்படி, முதல்நாளான நேற்று 15.07.2025 அன்று 6 இடங்களில் நடைபெற்ற முகாமில் 1080 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று சிவகாசி வட்டம், நடையனேரி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும், இம்முகாமில், முதியோர் உதவித்தொகை வேண்டி மனு அளித்த இரண்டு விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், பட்டா பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, பட்டா நகல் வேண்டி விண்ணப்பித்த முதியவருக்கு உடனடியாக இணையவழி பட்டா நகலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமானது நாளை (17.07.2025) விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைகுறிச்சி (சிவஞானபுரம்) சமுதாயக்கூடத்திலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம் எஸ்.ஆர்.நாயுடு சமுதாயக்கூடத்திலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியாபுரத்திலும், விருதுநகர் நகராட்சியில், வார்டு -1 லட்சுமி மஹால் புல்லலக்கோட்டை பகுதியிலும், சாத்தூர் நகராட்சி வார்டு -1 ராஜகோபால் திருமண மண்டபம் நடராஜ் தியேட்டர் ரோடு பகுதியிலும், இராஜபாளையம் நகராட்சி- வார்டு 1 ஏ.கே.டி.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 18.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சி வெள்;ர் பகுதியிலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை கம்மவார் திருமண மண்டபம் நடராஜ் தியேட்டர் ரோடு, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு வெங்காநல்லூர் சமுதாயக்கூடத்திலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் பத்திரகாளி திருமண மஹாலிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் -3ல் விஜய சுந்தர மஹால் திருத்தங்கல் அரசு மருத்துவமனை அருகில், செட்டியார்பட்டி பேரூராட்சியில் இராமதவசி திருமண மஹாலிலும், 22.07.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பட்டி சமுதாயக்கூடத்திலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பொம்மக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலத்திலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அச்சன்குளம் சமுதாயக்கூடத்திலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், டி.வேலங்குடி ஊராட்சி அங்கன்வாடி மையம் அருகிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு -4 சூர்யா மஹாலிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சி வார்டு -5 திருமலை நாயக்கர பகுதியிலும், 23.07.2025 அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சத்திரரெட்டியாபட்டி சமுதாயக்கூடத்திலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெற்றிலையூரணி பகுதியிலும், அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு-5ல் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மல்லாங்கிணறு பேரூராட்சியில் சாந்தி மண்டபம் கல்குறிச்சி மெயின்ரோட்டிலும், காரியாபட்டி பேரூராட்சியில் பேரூராட்சி திருமண மண்டபத்திலும், 24.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வெள்;ர் தொடக்கப்பள்ளியிலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணன் கோவில் மண்படத்திலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு வெங்காநல்லூர் வேட்டை பெருமாள் கோவில் திருமண மண்டபத்திலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், மூவரை வென்றான் மக்கள் மன்றத்திலும், விருதுநகர் நகராட்சி வார்டு எண் -5ல் லட்சுமி மஹால் புல்லலக்கோட்டை பகுதியிலும், சாத்தூர் நகராட்சி வார்டு எண் 5-ல் உள்ள எஸ்.கே.பேரடைஸ் திருமண மண்டபத்திலும், 25.07.2025 அன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செட்டிக்குறிச்சி சமுதாயக்கூடத்திலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கே.செட்டிக்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் சமுதாயக்கூடத்திலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆண்டியேந்தல் ஊராட்சி VPRC Building அருகிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் 6-ல் சூர்யா மஹாலிலும், இராஜபாளையம் நகராட்சி வார்டு எண்-5ல் என்.ஆர்.கே.திருமண மஹாலிலும், 29.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிச்சேரி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மத்தியசேனையில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி கிராம பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில், இராஜபாளையம் நகராட்சியில், அருள்புத்தூர் கிராம சமுதாயக்கூடத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், அயன்நத்தம்பட்டி கிராமள முத்தாலம்மன் திருமண மண்டபத்தில், அருப்புக்கோட்டை (நகராட்சி) வார்டு -6ல், தேவாங்கரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காரியாபட்டி (பேரூராட்சி) முகாம் 2-ல், அம்லா திருமண மஹாலில், 30.07.2025- அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ரோசல்பட்டி முகாம் 1-ல் , சமுதாயக்கூடத்தில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லி கிராமம், அஸ்வின் திருமண மஹாலில், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி கிராமம் வார்டு 16-ல், வி.பி.சி. கட்டடத்தில், சிவகாசி மாநகராட்சி வார்டு 7-ல் ஆர்.ஆர்.மஹாலில், திருவில்லிபுத்தூர் நராட்சி வார்டு -6ல் முத்துச்சாமி நாடார் திருமண மஹாலில், செட்டியார்பட்டி பேரூராட்சி முகாம் 2-ல் நெல் அரசி வியாபாரி திருமண மஹாலில், 31.07.2025- சிவகாசி மாநகராட்சி, சுக்கிரவார்பட்டி கிராம தொடக்கப்பள்ளியில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி, பூவாணி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபத்தில், இராஜபாளையம் நகராட்சி, புத்தூர் கிராம சமுhயக்கூடத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி கிராமம் அழகாபுரி மக்கள் மன்றத்தில், விருதுநகர் (நகராட்சி) வார்டு 6-ல் பெரிய பள்ளி வாசல் திருமண மஹாலில், சாத்தூர் (நகராட்சி) வார்டு 6-ல் ராஜகோபால் திருமண மஹாலிலும், நடைபெறுகிறது. மேலும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார்.

Similar News