பூதலூர் அருகே மினிபஸ் துவக்க விழா 

துவக்க விழா;

Update: 2025-07-16 17:04 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கழுமங்கலம் கிராமத்திலிருந்து பூண்டி மாதா கோவில் வரை புதிய வழித்தடத்தில், பூண்டி மாதா என்ற புதிய மினிபஸ் துவக்க விழா நிகழ்ச்சி புதன்கிழமை கழுமங்கலத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில், மினிபஸ் உரிமையாளர் ரங்கராஜன்,  மைக்கேல்பட்டி பங்குதந்தை இன்பராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர்.ரவிசந்தர், சிபிஎம் திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம்,  கழுமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.காசிஅய்யா, சிபிஎம் கழுமங்கலம் கிளைச் செயலாளர் ஏ.ஆரோக்கியசாமி, வரகூர் கிளைச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News