பூதூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
பூதூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்;
செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் ஒன்றியம், பூதூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஒன்றிய செயலாளர் சத்தியசாய், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் இந்த கோரிக்கை மனுக்கள் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.