மாமியாரை கற்பழிக்க முயன்ற மருமகன் கைது !
கவுண்டம்பாளையத்தில் 75 வயது மாமியாரை கற்பழிக்க முயன்றதாக மருமகன் கைது செய்யப்பட்டார்.;
கவுண்டம்பாளையத்தில் 75 வயது மாமியாரை கற்பழிக்க முயன்றதாக மருமகன் கைது செய்யப்பட்டார். 51 வயதான மணிகண்டன், குடிபோதையில் நள்ளிரவில் மாமியாரின் அறைக்குள் புகுந்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மாமியார் கூச்சலிட, பேரன் உடனடியாக பதிலடி கொடுத்து தந்தையை தாக்கினார். தகவலறிந்த மத்திய அனைத்து மகளிர் காவல் துறை நடவடிக்கை எடுத்து மணிகண்டனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.