அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கிய தனியார் பள்ளி மாணவர்கள் 

எழுதுபொருட்கள் வழங்கல்;

Update: 2025-07-17 14:18 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் உள்ள, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளி சார்பில் நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமையில், குமரப்பா பள்ளியில் பயிலும் மாணவர்களின் பங்களிப்போடு, பேராவூரணி பகுதியில் உள்ள செருவாவிடுதி உடையார் தெரு, மருதங்காவயல், ஏனாதிகரம்பை மேற்கு, நவக்கொல்லைக்காடு, விளங்குளம் தெற்கு, பாங்கிரான்கொல்லை, சின்ன கள்ளங்காடு ஆகிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 170க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் ஆகிய பொருட்களை குமரப்பா பள்ளி மாணவர்கள் வழங்கினர். இதில்,  பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பள்ளி முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ், சி.பி.எஸ்.இ ஒருங்கிணைப்பாளர் விவேகா, ஆசிரியர்கள் பெரியநாயகி, விஜய், மூர்த்தி, ரமாதேவி, அரவிந்தன், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News