குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞாலம் பகுதியை சேர்ந்தவர் தாம்சன் மனைவி வள்ளியம்மா (68). இவர் ஞாலம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியதில் வள்ளியம்மா காயமடைந்தார். அவர் தெரிசனங்கோப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.