கலவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கலவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்;

Update: 2025-07-18 05:03 GMT
கலவை பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், சென்னசமுத்திரம் சாலை, ஆற்காடு சாலை, ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளை ஆக்கிரமித்து கடை உரிமையாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் கலவை தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது 20-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News