ரத்தினகிரி:இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி ஒருவர் பலி!
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி ஒருவர் பலி!;
ரத்தினகிரி அருகில் உள்ள கன்னிகா புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 43), தையல் தொழிலாளி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் ஜோதி என்பவரும் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் தென்நந்தியாலம் சென்று விட்டு அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். ரத்தினகிரி மேம்பாலம் கீழே சர்வீஸ் சாலையில் செல்லும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் சங்கர், ஜோதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு பூட்டுத்தாக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். படுகாயம் அடைந்த ஜோதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.