நெமிலி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து!

நெமிலி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து!;

Update: 2025-07-18 08:21 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பருவமேடு அருகே காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்தை நோக்கி வந்து கொண்டிருந்த காரின் முன்பக்க டயர் வெடித்ததால் எதிரே வந்த டேங்கர் லாரியின் மீது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதியுள்ளது.கார் மீது மோதி விட கூடாது என்பதற்காக டேங்கர் லாரி ஓட்டுநர் சாலையை விட்டு சென்றதால் லாரியும் கவிழ்ந்துள்ளது. கார் அதிவேகமாக மோதியதால் காரில் பயணம் பெண் சம்பவ இடத்திலே பலியானார்.படுகாயத்துடன் காரில் சிக்கிக் கொண்டிருந்த கார் ஓட்டுநர் மற்றும் உடன் பயணித்த நபர் உட்பட 2பேரை தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.... இந்த கோர விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதோடு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News