பேராவூரணி பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்;

Update: 2025-07-18 13:45 GMT
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்று, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இந்நிலையில், இதற்காக ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஜூலை 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு பரிசீலித்து, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளை நியமிக்கும்.  இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சிக்கு நியமன உறுப்பினர் பதவிக்காக, நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம், டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில், பேராவூரணி சிதம்பரம் சாலையைச் சேர்ந்த, சேக் அப்துல்லா என்ற மாற்றுத்திறனாளி, பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.  நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.பஹாத் முகமது,  மாவட்டப் பொருளாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக சேக் அப்துல்லா, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Similar News