வாணியம்பாடியில் திமுக அரசை கண்டித்து வீதி வீதியாக துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் தலைமையிலான அதிமுகவினர்
வாணியம்பாடியில் திமுக அரசை கண்டித்து வீதி வீதியாக துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் தலைமையிலான அதிமுகவினர்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திமுக அரசை கண்டித்து வீதி வீதியாக துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் தலைமையிலான அதிமுகவினர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இன்று திமுக கட்சி ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்யாத நிலையில் அதனை ரத்துச்செய்யக்கோரியும், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு திமுகவினர் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரியும், திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையிலான அதிமுகவினர், வாணியம்பாடியில், உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மளிகை கடை, பூ வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள், பேருந்து பயணம் செய்யும் மக்கள் என பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்தும் பிரச்சாரம் மேற்க்கொண்டனர்.. இதில் அதிமுக அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்