திருவட்டத்துறை: திருப்பணிகள் தொடங்கி வைப்பு
திருவட்டத்துறை பகுதியில் திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவட்டத்துறையில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் துவக்கி வைத்தார். உடன் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.