ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்த பக்தர்கள்
மதுரை தெற்கு வாசல் முனீஸ்வரர் கோவிலில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர்.;
மதுரை தெற்கு வாசல் மார்க்கெட் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலின் 65 ஆவது ஆண்டு உற்சவ விழா மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று (ஜூலை.18) இரவு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து அபிஷேகம் ,சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.