கள்ளக்குறிச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களை பரிசோதித்து, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் சென்டர்கள் அதிகரித்து உள்ளது. உரிய கல்வி தகுதியின்றி பலர் ஸ்கேன் சென்டர்களை நடத்தி வருவதை தடுக்க தவறிய மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாலினியை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேல், மாநில மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் ராஜா பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.