கிளியாநகர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
கிளியாநகர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்;
கிளியாநகர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் ,அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கிளியாநகர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஒன்றிய செயலாளர் தம்பு, ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் வருவாய்த்துற, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த முகாமில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்கள் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைக்கு செய்த பல்வேறு திட்டங்கள் குறித்து பதாகைகள் மூலம் வைத்திருந்தது பெரும் நெகிழியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சிவபெருமான், மாவட்ட கவுன்சிலர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.