முற்றுகையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி
முற்றுகையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி;
திமுக அரசால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடைகள் மது அருந்தும் பாராக மாறி உள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூரில் பழைய பேருந்து நிழற்குடையை இடிக்க கூடாது என கோரிக்கை வைத்து முற்றுகையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமலேரி முத்தூர் ஊராட்சி பகுதியில் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சாலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் 2008 ஆம் ஆண்டு ஊராட்சி நிதியிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்பொழுது இந்த நிழற்குடையை சேதம் அடைந்து விட்டதாக கூறி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பழைய பேருந்து நிழற்குடையை அப்புறப்படுத்தி விட்டு புதிய பேருந்து நிழற்குடை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பழைய பேருந்து நிழற்குடையை அப்புறப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் ஒப்பந்ததாரர் வந்த பொழுது... அந்த இடத்திற்கு பொதுமக்களுடன் வந்து முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பணியை நிறுத்தி முற்றுகையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும் போது ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர் யாருக்கும் தெரியாமல் எப்படி ஊராட்சி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட நிழற்குடையை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர் என யாருக்கும் தெரியாமல் அவர்களுடைய ஒப்புதல் இன்றி நன்றாக இருக்கக்கூடிய நிழற்குடையை இடித்துவிட்டு பல லட்சங்களை செலவழித்து புதிய பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டிய அவசியம் என்ன. இந்த தொகையை ஊராட்சியில் பல இடங்களில் பழுதடைந்துள்ள பள்ளிக்கூட சாலை சுடுகாட்டு சாலை உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கான சாலை தேவைகளை நிவர்த்தி செய்ய பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே திமுக அரசால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் வெறும் விளம்பரத்திற்காக மட்டும் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடைகள் எல்லாம் மது அருந்தும் பாராக மாறி உள்ளது. எனவே இந்த பேருந்து நிழற்குடையை இடிப்பதை நிறுத்திவிட்டு இந்த நிதியை வேறு விஷயங்களுக்கு பயன்படுத்த அரசும் அதிகாரியும் முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்தர. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இது சம்பந்தமாக ஆலோசனைகள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதன் அடிப்படையில் முற்றுகை கைவிடப்பட்டது.