சமட்டிகுப்பம்: பாமகவினருக்கு அழைப்பு விடுப்பு
சமட்டிகுப்பம் பகுதியில் பாமகவினருக்கு பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.;
வருகின்ற 20ஆம் தேதி விழுப்புரத்தில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற இருக்கின்றது. போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சமட்டிகுப்பம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரை பாமக வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் நேரடியாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து அழைப்பு விடுத்தார்.