கடலூர்: சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
கடலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த குமராபுரம் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சார்பில் மனநல திட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.