விருத்தாசலம்: தூய்மை பணிகள் குறித்து ஆய்வு
விருத்தாசலம் பகுதியில் தூய்மை பணிகள் குறித்து நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆணையாளர், பொறியாளர், எஸ்.ஐ ஆகியோரிடம் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.