மதுராந்தகம் அருகே அரசு பேருந்து மோதி டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்து

மதுராந்தகம் அருகே அரசு பேருந்து மோதி டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்து;

Update: 2025-07-19 16:24 GMT
மதுராந்தகம் அருகே அரசு பேருந்து மோதி டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் அருகே உள்ள கல்லாறு பிரிட்ஜின் மீது கருங்குழியில் இருந்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு மதுராந்தகம் சென்ற டிராக்டர் பின்பகுதியில் அரசு பேருந்து மோதியதில் டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் சாலையில் கவிழ்ந்த டெக்டரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News