உலக அமைதி வேண்டி திருவாசகம் முற்றோதல்

முற்றோதல்;

Update: 2025-07-20 03:56 GMT
உளுந்துார்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணி சிறப்பாக நடைபெற வேண்டியும், உலக அமைதி வேண்டியும் திருவாசகம் முற்றோதல் ஞானப்பெருவேள்வி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சாரதா ஆசிரம நிர்வாகி யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா வரவேற்றார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ், கைலாசநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ், அறங்காவலர் குழு ஏழுமலை, ராதிகா சரவணன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News