சோளிங்கர் அருகே வீடு இடிந்து விழுந்து பெண் படுகாயம்

வீடு இடிந்து விழுந்து பெண் காயம்;

Update: 2025-07-20 05:33 GMT
சோளிங்கர் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 70). இவருடைய மனைவி கிளியம்மாள். இவர்க ளுக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 6 பேரும் வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இரவில் மழை பெய்ததால் அதிகாலையில் ஓட்டு வீட்டின் கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் எழுந்து அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு வீட் டிற்கு வெளியே ஓடிவந்துள்ளனர்.அப்போது வேலுவின் 3-வது மகள் வீட்டின் இடிபாடுகளில் சிக் கிக்கொண்டார். அதனால் அவரால் எழுந்து வர முடியவில்லை. இதை பார்த்து அவரது குடும்பத்தினர் கத்தி கூச்சலிட்டனர். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவரை மீட்டு வெளியே அழைத்துவந்தனர். வீடு இடிந்து விழுந்ததில் அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள், பீரோ என அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. அரசு அதிகாரிகள் இதுவரை வீடு இடிந்து விழுந்ததை வந்து பார்வையிட வில்லையென குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழுந்த வீட்டை பார் வையிட்டு அரசு உதவிகள் வழங்க வேண்டும் என்றும், வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News