பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்தவர்கள் சிறையில் அடைப்பு
பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்தவர்கள் சிறையில் அடைப்பு;
நெமிலி அடுத்த ரெட்டிவலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 41). நெமிலியில் உள்ள தனியார் லுங்கி கம்பெனி யில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மலர் (43), அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த ராஜா (36) ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் நெருக்கம் அதிகமான தால், கிருஷ்ணவேணி வீட்டுக்கு, மலர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்தநிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கிருஷ்ணவேணியின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் மலர் பதி விட்டுள்ளார். இதனை ராஜா உள்ளிட்ட பலர் ஷேர் செய்துள்ளனர். இந்த பதிவை பார்த்து கிருஷ்ணவேணி அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இது தொடர்பாக சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன், நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் நாராய ணசாமி உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் மலர் மற்றும் ராஜாவை நேற்று நெமிலி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசா ரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.