உரிய நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரம்

மதுரை திருமங்கலத்தில் புதிய நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2025-07-20 12:58 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர், நீதிமன்றம் சார்பு நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம், திருமங்கலம் கிளை சிறை, கருவூலம் என 4 ஏக்கர் பரப்பளவில் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க சுமார் 5 ஏக்கர் இடம் தேவை என்பதால் இதற்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம் தேர்வு செய்து வரும் நிலையில் இதுவரை உரிய இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போதுள்ள நீதிமன்ற கட்டடத்தின் பின்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் நேற்று (ஜூலை .19) ஆய்வு செய்தார். உடன் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News