திருப்பரங்குன்றத்தில் குவிந்து வரும் பக்தர்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.;
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (ஜூலை .20) ஆடி கார்த்திகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் பெருமளவில் வந்த காரணத்தினால் கோவில் நிர்வாகம் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் முன் கதவை பூட்டி பக்தர்களை வெளியே நிறுத்தி வைத்து உள்ளே அனுப்புகின்றனர். பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 14ம்தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.