மதுரை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
மதுரை அருகே சாலை தடுப்பில் டூவீலருடன் மோதிய வாலிபர் பலியானார்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருகப்பிள்ளை மேலத்தெருவை சேர்ந்த பெரியகருப்பன் மகன் விக்னேஷ் (26) என்பவர் காமராஜர் பல்கலைக்கழகம் வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் மருத்துவமனை அருகே சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த விக்னேஷை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை.19) உயிரிழந்தார். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.