நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரை திருமங்கலம் அருகே நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-07-20 14:31 GMT
மதுரை திருமங்கலம் தாலுகா மேல உரப்பனூர் வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் சுவேதா(18) நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்துள்ளது. அதற்கான சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இந்நிலையில் வலி அதிகமானதால் மனமுடைந்த சுவேதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News