தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமசாமியை திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.;
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை முதலே ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது சுமார் மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந் நிலையில் இன்று மாலை ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்த நிகழ்வு நடைபெற்றது.