மேலூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
மதுரை மேலூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளநாதன்பட்டி கிராமத்தில் நாளை 22ம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற உள்ளது. பிரபாகர் இரண்டாம் ஆண்டு நினைவாக செந்தில் அம்பலம் சார்பில் நடத்தப்படும் இந்த வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்கும் அனைத்து காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் 32 இன்ச் எல்இடி டிவி உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.