மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் ஊராட்சி குழு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல்

மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் ஊராட்சி குழு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல்;

Update: 2025-07-21 08:51 GMT
திருப்பத்தூர் மாவட்டம் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் ஊராட்சி குழு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல்* தமிழகத்தில் சட்டசபை உள்ளாட்சித் தேர்தலில் மாற்று திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கி வாய்ப்பளிக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை நிறைவேற்றவும் உள்ளாட்சி அமைப்புகளில் குரல் கொடுக்கவும் புதிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தநிலையில் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளின் நியாயமான உறுப்பினர்களாக அறிவிக்கப்படுவார் என அறிவித்திருந்தார். அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் அரவிந்தன் என்ற நபர் மாற்றுத்திறனாளிகளுடன் ஊர்வலமாக வந்து மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து ஊராட்சி குழு உறுப்பினருக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் பேட்டி; அரவிந்தன் மாவட்ட பொறுப்பாளர்

Similar News