*கே.பந்தாரப்பள்ளி பகுதியில் ஆடி கிருத்திகை முன்னிட்டு அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்*
*கே.பந்தாரப்பள்ளி பகுதியில் ஆடி கிருத்திகை முன்னிட்டு அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்*;
திருப்பத்தூர் மாவட்டம் கே.பந்தாரப்பள்ளி பகுதியில் ஆடி கிருத்திகை முன்னிட்டு அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கே.பந்தாரப்பள்ளி முருகன் கோவிலில் அழகு குத்தி கயிற்றில் தொங்கியபடி முருகனுக்கு தீபாரதனை காட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியில் சுமார் நூறு வருடம் பழமை வாய்ந்த முருகன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு காலை முதல் அபிஷேக ஆராதனைகள் நடந்தன அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமானை ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர் அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அழகு குத்தி கயிற்றில் தொங்கியபடி சென்று முருகப்பெருமானுக்கு கற்பூர தீபாரதனை காட்டியும் அதனைத் தொடர்ந்து சடல மரம் சுற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் இதில் நாட்றம்பள்ளி கே.பந்தரப்பள்ளி உள்ளிட்ட பகுதி சேர்ந்த மக்கள் ஏராளமானார் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருள் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது