பள்ளி மாணவனை இழிவாக பேசிய ஆசிரியர்

அய்யலூர் அருகே பள்ளி மாணவனை இழிவாக பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு;

Update: 2025-07-21 13:11 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யலூரை அடுத்த கொல்லம்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது குடும்பத்தாருடன் மனு அளித்தார் அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது : எனது மகன் அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து அனைத்து வருகிறான். அதே பள்ளியில் பணிபுரியும் வரலாறு ஆசிரியை முத்துலட்சுமி எனது மகனை இழிவாக பேசியும் ஜாதியை சொல்லியும், தகாத வார்த்தைகளாலும் திட்டுகிறார் எனவே ஆசிரியை முத்துலட்சுமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எனது மகன் மீண்டும் பள்ளி தொடர வழி வகுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News