புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான துவக்க விழா

ஆத்தூரில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான துவக்க விழா;

Update: 2025-07-21 13:15 GMT
ஆத்தூர் கூட்டுறவு கலைக் கல்லூரியின் 2025-2026-ம் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான துவக்க விழாவை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் தேவைக்கேற்ப கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியில் 2 கல்லூரிகள், ஒட்டன்சத்திரத்தில் இரண்டு கல்லூரிகள், நத்தத்தில் ஒரு கல்லூரி, பழனியில் சித்தா கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.

Similar News