புதிய சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம் எல் ஏ.
மதுரை செல்ல திருவிழாக்குடையார் கோயில் அருகே புதிய சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ திறந்து வைத்தார்.;
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 29 வது வார்டு செல்லூர் திருவாப்புடையார் கோயிலை சுற்றிலும் பொதுமக்கள் பயன்படும் வகையில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.. இந்த புதிய சாலையை இன்று (ஜூலை.21) தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்கள், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.. உடன், மாமன்ற லோகமணி ரஞ்சித்குமார், உதவி பொறியாளர்,பாஸ்கர பாண்டியன், சுகாதார ஆய்வாளர் .அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்