அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மனு
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்;
கள்ளர் பள்ளி மற்றும் விடுதிகளுக்கு பெயர் மாற்றபட்டதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் கள்ளர் பள்ளிகளில், அந்தந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து ஜாதி மக்களின் குழந்தைகளும் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், அரசு கள்ளர் பள்ளி மற்றும் விடுதிகளுக்கு அந்த பெயரிளை நீக்கிவிட்டு, அதற்கு சமூக நீதி விடுதி மற்றும் பள்ளி என பெயர் மாற்றம் செய்ய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதனை அரசு அந்த அரசாணையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மேலும், அரசு கள்ளர் பள்ளி என்ற பெயரிலேயே தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான DN'T சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். என மனுவில் தெரிவித்து இருந்தனர்.