வாணியம்பாடியில் மலைக்குன்றின் மீது இருந்து வீதியில் உருண்டு விழுந்த ராட்சத பாறையால் பரபரப்பு..

வாணியம்பாடியில் மலைக்குன்றின் மீது இருந்து வீதியில் உருண்டு விழுந்த ராட்சத பாறையால் பரபரப்பு..;

Update: 2025-07-22 02:23 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மலைக்குன்றின் மீது இருந்து வீதியில் உருண்டு விழுந்த ராட்சத பாறையால் பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் உள்ள மில்லத் நகர் பகுதியானது மலைக்குன்றின் மீது அமைந்துள்ள நிலையில் இப்பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், மில்லத்நகர் பகுதியில் உள்ள மலைக்குன்றின் மீது நேற்று திடீரென மண் சரிந்ததில் ராட்சத பாறை ஒன்று உருண்டு குடியிருப்பு பகுதியில் உள்ள வீதியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. மேலும் இரவு நேரம் என்பதால் வீதியில் இருந்து பாறையை அகற்றும் பணி நடைப்பெறாத நிலையில், காலை பொழுதில் விரைவாக வீதியில் விழுந்த பாறையை அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மலைக்குன்றில் இருந்து வீதியில் பாறை உருண்டு விழுந்த சம்பவத்தில் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்படவில்லை.. என்பது குறிப்பிடத்தக்கது..

Similar News