இந்து மகா சபா அமைப்பினர் மனு

மனு;

Update: 2025-07-22 03:57 GMT
கள்ளக்குறிச்சியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்க வழிவகை செய்யக்கோரி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் செந்தில் தலைமையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வேடமணிந்த நபர் மற்றும் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்; உளுந்தூர்பேட்டை தாலுகா, அஜீஸ் நகர் கிராமத்தில் அதிகளவில் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் வசிக்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்கும் பிரமலைக் கள்ளர் மக்கள், ஆண்டுதோறும் அக்., 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் நடைபெறும் குருபூஜைக்கு சென்று வருகின்றனர். கமுதி நீண்ட துாரத்தில் இருப்பதால் முதியவர்கள், சிறுவர்களால் பயணிக்க முடியவில்லை. மேலும், அதிகளவு பொருளாதார செலவும் ஏற்படுகிறது. எனவே, அஜீஸ் நகர் கிராமத்தில் உள்ள அரசு இடத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News