திருப்பத்தூரில் தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்..
திருப்பத்தூரில் தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்..;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர் செல்வம் சுமார் இரண்டு மணி நேரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் பேசி விபத்து குறித்த காட்சிகளை காணொளி காட்சி வாயிலாக திரையிட்டு தலைக்கவசம், சீட் பெல்ட், போடுவது இளம் வயது மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பாக வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்து உள்ளிட்ட பல்வேறு விளக்க உரைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே அதிக விபத்துக்கள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் நிலையில் விபத்துகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்கிற கருத்தில் கின்னஸ் சாதனையை நோக்கி நகரும் இவர் ஒரு மாதத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு பாதசாரிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விட வேண்டும் என்கிற நோக்கத்தில் தன்னுடைய பணி சுமையை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறுகிறார் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.