தமிழக அரசுக்கு எதிராக ஒப்பாரி வைக்கும் போராட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது;

Update: 2025-07-22 13:03 GMT
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்டோர் இணைந்து கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றுவதாக கூறியவற்றை நிறைவேற்றவும் அதேபோல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவும் கோரிக்கை வைத்தனர். இதில், * சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு முறையான சிறப்பு பென்ஷன் அகவிலை பொலிவுடன் ரூ. 6750 வழங்க வேண்டும். * ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என்று சொன்ன தேர்தல் வாக்குறுத்தியை திமுக நிறைவேற்ற வேண்டும் * சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2.57 காரணிபடி ஓய்வூதியம் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தியும் இந்தக் கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. மேலும் இதில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். மேலும் தமிழ்நாடு அரசு தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் தெரு முனை பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் நடத்தி ஓட்டு யாருக்கு போடுவது என முடிவு செய்யப்படும்" என தெரிவித்தனர்.

Similar News