கூலி படத்தின் ‘பவர் ஹவுஸ்’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘கூலி’. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.;

Update: 2025-07-22 17:48 GMT
இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘Chikitu’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிளாக ‘பவர் ஹவுஸ்’ பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை அறிவு எழுதி, அனிருத் உடன் இணைந்து பாடியுள்ளார். ரஜினிகாந்தை போற்றும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. ‘கெட்ட பையன் டா’, ‘பத்த வெச்சிட்டயே பரட்ட’ என முந்தைய ரஜினி பட வசனங்கள் சில இதில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 3.29 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்தப் பாடலை ரஜினிகாந்த், அனிருத், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

Similar News