கந்திகுப்பம் அருகே அம்மன் தாலி, வெள்ளிக் கிரீடம் திருட்டு.
கந்திகுப்பம் அருகே அம்மன் தாலி, வெள்ளிக் கிரீடம் திருட்டு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த கொள்ளுர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே ஊரைசேர்ந்த சேர்ந்த குப்பன் என்பவர் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு ஊர் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கோவிலுக்குள் வந்து பார்த்த போது அம்மனின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் இரண்டு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பக்தர் அளித்த காணிக்கை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.